January 19, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பாக இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வீடுகளிலேயே சென்று செலுத்த தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:
இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 0422-2302323 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால் அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.
மேலும், 60 வயதை கடந்த முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களை கடந்த நபர்களும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் அவர்களுக்கும்வீடுகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.