November 24, 2022 தண்டோரா குழு
உலக பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவ்வாரத்தை கொண்டாடுவதன் நோக்கமாகும். 2022 ஆம் ஆண்டின் கருப்பொருளானது ” நகர்ப்புறங்களிலுள்ள பச்சிளம் குழந்தைகளின் வீட்டு பராமரிப்பு முறை ” பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் அ ஜெயசுதா அவர்களின் தலைமையில் குழந்தைகள் நல பிரிவு துறை தலைவர், பேராசிரியர் ரோஸிலின் மைவிழி.ஜோ.எ. மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய வளர்ச்சியின் தேவைகளை வெவ்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு வலியுறுத்தினர்.
நாள் 1
14.11.22 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பி.எஸ்.ஜி மருத்துவ மனையில், குழந்தைகள் நல பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி மற்றும் மேஜிக் ஷோ நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் தலைமை விருந்தினர், பி.எஸ். ஜி மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சுப்பாராவ் அவர்கள் பெற்றோர்களுக்கு தலைமை உரை ஆற்றினார். குழந்தைகளின் உடல்நலம் பற்றிய பெற்றோர்களின் கேள்விகளுக்கு குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் திருமால் (இரைப்பை குடல் மருத்துவர் ) பதில் அளித்தார். மேலும் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நாள் 2
15.11.22 அன்று உலக நிமோனியா தினம் “நிமோனியாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறல் ” என்ற கருப்பொருளுடன். குழந்தைகள் நல துறையில் வெளிநோயாளிகளின் பிரிவில் அனுசரிக்கப்பட்டது. பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் நிமோனியா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுமார் 150 பெற்றோர்கள் பயனடைந்தனர்.
நாள் 3
16.11.22 அன்று தடுப்பூசி பற்றிய விவரங்களையும் நன்மைகளையும் மக்களுக்கு எடுத்து சொல்லும் நோக்கத்தில் தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி “அனைவருக்கும் நீண்ட ஆயுள்” என்ற கருப்பொருளுடன் வேடப்பட்டி பி.எஸ் .ஜி சுகாதார மையத்திலிருந்து தொடங்கி சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்ட கிராமங்களில் நடைபெற்றது. பேரணியில் பி.எஸ். ஜி செவிலியர் கல்லூரியின் குழந்தைகள் நல துறை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் நல துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு செய்திகளை ஏந்தி கோஷமிட்டு நடந்தனர்.
நாள் 4
உலக குறைபிரசவ குழந்தைகள் விழிப்புணர்வு தினம் 17.11.22 அன்று, “சக்திவாய்ந்த சிகிச்சை : பிறந்ததிலேருந்து தாய் சேய் உடலுடன் உடல் தொடர்பில் இருத்தல்” என்ற கருப் பொருளில் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் குறைமாதத்தில் குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கு குழந்தைகளின் வளர்ப்பு முறையும், பராமரிப்பு முறையும் பற்றிய வகுப்புகள் நடத்தப்பட்டது. கங்காரு தாய்மை பேணல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நன்மைகளும் செயல்முறை விளக்கத்துடன் விவரிக்கப்பட்டது. இதன்முலம் பல பெற்றோர்கள் பயனடைந்தனர்.
நாள் 5
18.11.22 அன்று “பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு கண்காட்சி” நடைப்பெற்றது. இதில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மக்களுக்கு புரியும் வகையில் குழந்தைகள் பராமரிப்பு, தாய்ப்பாலின் முக்கியத்துவம், வெப்பநிலை மேம்பாடு, கங்காரு தாய்மை பேணல், தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் தாய்ப்பால் வங்கி செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றிய பல்வேறு வகையான மாதிரிகள் வைத்து விளக்கினர்.பச்சிளம் குழந்தைகளின் வீட்டு பராமரிப்பு முறை என்ற பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
கண்காட்சி காலை 10.30 மணிக்கு துவக்கப்பட்டது. மதிப்பிற்குரிய முதல்வர் டாக்டர் ஏ .ஜெயசுதா, பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி,டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன். எம்.டி; பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, டாக்டர். பி.ஆர்.ராஜ்குமார், எம்.டி., பி.எஸ்.ஜி மருத்துவமனைகள், டாக்டர். எ.ஜெயவர்த்தனா, குழந்தைகள் நல துறை தலைவர், டாக்டர். எஸ்..ரமேஷ், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, டாக்டர். என்.டி ராஜேஷ், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, மற்ற குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கண்காட்சி நடைபெற்றது. சுமார் 450 பொதுமக்கள் பயனடைந்தனர்.
கண்காட்சி பயனுள்ளதாகவும், ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தவும் விருப்பம் தெரிவித்தனர்.
நாள் 6
21.11.22 ஆம் நாள் குழந்தைகளின் பராமரிப்புகள் பற்றிய விழிப்புணர்வு திறனை அறிய பெற்றோர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் உள் நோயாளிகள் பிரிவில் உள்ள பெற்றோர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதில் சிறப்பாக மற்றும் சரியான பதிலளித்த குழுவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.