January 21, 2024 தண்டோரா குழு
இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக பூ விருட்சம் நிறுவனம் சார்பாக,பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக ரைஸிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது.
கோவையை சேர்ந்தவர் தாரா.அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதில் ஆர்வமுடைய இவர்,கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இரசாயன பொருட்கள் கலப்படமில்லாத முழுவதும் இயற்கை மூலிகை பொருட்களை கொண்டு,அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை துவக்கி உள்ளார்.பூ விருட்சம் எனும் பெயரில் துவங்கிய இந்நிறுவனம் தற்போது அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னனி நிறுவனமாக உள்ளது.
இந்நிலையில் இவரை போன்ற பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இணையதளம் வாயிலாக பெண் தொழில் முனைவோராக ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சியும் அளித்த தாரா தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண் தொழில் முனைவார்களாக பலரை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை இந்துஸ்தான் கல்லூரி அரங்கில் பூ விருட்சம் நிறுவனம் சார்பாக ரைஸிங் ஸ்டார் எனும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிறுவனத்தின் நிறுவனர் தாரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக,வழக்கறிஞர் டாக்டர் சேதுராம்,அச்சுதன் பணிக்கர்,உயர் நீதி மன்ற வழக்கறிஞர் பிரபு,பற்கள் அழகு நிபுணர் பிரீத்தி கரோலின்,சின்னத்திரை பிரபலம் விஜய், நடிகர் மாடல் சச்சின் முருகேசன், ரொட்டேரியன் விசித்ரா செந்தில் குமார்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில்,திருப்பூர்,ஈரோடு,சேலம் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண் தொழில் முனைவார்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாடல், சுயதொழில், கல்வி, என பல்வேறு துறைகளில் தொழில் முனைவோராக உள்ள சாதனை மகளிர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.