June 5, 2017 தண்டோரா குழு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் இன்று சந்தித்தார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நேற்று முன் தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த தினகரன், தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபடப்போவதாகவும், அதிமுக கட்சியை பலப்படுத்த முயற்சி எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று முழுவதும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தினகரன், இன்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுளள சசிகலாவை சந்திப்பதற்காக காலை பெங்களூரு சென்றார்.
அவருடன் அவரது மனைவி அனுராதா, அதிமுக எம்.பி மற்றும் 10 எம்.எல்.ஏக்கள், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சென்றனர்.
இதனைதொடர்ந்து, இன்று மதியம் மூன்று மணி அளவில் பரப்பன அக்ரஹாரம் சிறைக்கு தனது மனைவி அனுராதாவுடன் சென்ற டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.