September 13, 2017 தண்டோரா குழு
பெங்களூர் கூகுள் ஆராய்ச்சி விஞ்ஞானிக்கு 2௦17ம் ஆண்டிற்கான “Paul Baran Young Scholar” விருது வழங்கப்படவுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த கூகுள் ஆராய்ச்சி விஞ்ஞானி, ஆனந்த தீர்த்த சுரேஷ்க்கு, 2௦17ம் ஆண்டிற்கான “Paul Baran Young Scholar” விருது வழங்கப்படவுள்ளது.
“அடிப்படை இணையத்தை பயன்படுத்தி, குறைந்த விலையில் கைபேசி சாதனங்களில் வேகமாகவும் மற்றும் எளிதான தேடல் தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகணத்திலுள்ள மார்கோனி சங்கத்தில் வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி, சுரேஷுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுடன் 4000 அமெரிக்க டாலர்,மற்றும் இந்த விருது வாங்க நியூஜெர்சி செல்வதற்கான அனைத்து செலவுகளையும் மார்கோனி சங்கம் பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க மார்கோனி சங்கம், இரண்டு இந்திய வம்சாவளிகளுக்கும் விருது வழங்கவுள்ளது. தாமஸ் கைலாத் என்பவருக்கு நவீன தகவல்தொடர் நுட்பத்தின் பங்களிப்பிற்காக வாழ்நாள் சாதனையாளர் விருதும் மற்றும் டிஜிட்டல் வீடியோ தொழில்நுட்பத்தின் பணிக்காக அருண் நேத்ராலிக்கும் மார்கோனி பரிசு விருதும் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.