• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெட்ரோலிய பொருட்கள், சிமெண்ட், இரும்பு, காய்கறிகள், பழங்கள் ஏற்றியதில் சேலம் கோட்ட ரயில்வேக்கு ரூ.282.58 கோடி வருவாய்

March 10, 2023 தண்டோரா குழு

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 28 லட்சத்து 81 ஆயிரத்து 722 டன் சரக்குகளை ஏற்றி ரூ.282.58 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 17.02 சதவீதம் கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு துறை அதிகாரி கூறியிருப்பதாவது:

சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 28 லட்சத்து 81 ஆயிரத்து 722 டன் சரக்குகளை ஏற்றி ரூ.282.58 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 17.02 சதவீதம் கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.

இதில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 68 ஆயிரத்து 931 டன் சரக்குகளை ஏற்றி, ரூ.24.20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் ஈட்டிய வருவாயை விட 17.76 சதவீதம் அதிகம் ஆகும்.ரயிலில் ஏற்றப்பட்ட சரக்குகளில் பெட்ரோலிய பொருட்கள், சிமெண்ட், இரும்பு போன்றவைகள் அடங்கும்.

கோவை இருகூரில் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றப்பட்டு மைசூர், பெங்களூரு, ராய்ச்சூர் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. கரூர் அருகே ஏற்றப்பட்ட சிமென்ட் சேலம், ஈரோடு, திருப்பூர், இருகூர், கூடல் நகர் (மதுரை), திருநெல்வேலி மற்றும் கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேச்சேரி சாலையில் இரும்பு ஏற்றப்பட்டு காரைக்கால் துறைமுகம், சென்னை துறைமுகம், மோர்முகவ் துறைமுகம், அகமதாபாத் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.பார்சல்களை ஏற்றுவதில் சேலம் கோட்டம் சிறப்பாக செயல்பட்டது.

கோவையில் இருந்து காய்கறிகள், பழங்கள், பொறியியல் பொருட்கள் ஏற்றப்பட்டு, டெல்லி, கவுகாத்தி போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டன. திருப்பூரில் இருந்து பருத்தி உள்ளாடைகள் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், ஈரோட்டில் இருந்து முட்டைகள் பார்சல் பாட்னா, மால்டா, கவுகாத்தி போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இவை தவிர, சேலம், கரூரில் இருந்தும் பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.அதன் படி கடந்த் பிப்ரவரி மாதம் சேலம் கோட்டத்தில் 31391.6 குவிண்டால் பார்சல்களை ஏற்றி ரூ.1 கோடியே 85 லட்சத்து 87 ஆயிரம் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டியதை விட 1.43 சதவீதம் வருவாய் அதிகம்.

2022-23 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 408307 குவிண்டால் பார்சல்களை ஏற்றி அதன் மூலம் ரூ.21.49 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2021-22 ஏப்ரல் – பிப்ரவரி மாதங்களில், 333020 குவிண்டால் பார்சல்களை ஏற்றி ரூ.19.26 கோடி வருவாய் ஈட்டி இருந்தது. அதன் படி சேலம் கோட்டம் இந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டினை விட 22.61 சதவீதம் கூடுதல் பார்சல்களை ஏற்றியுள்ளது. 11.56 சதவீதம் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க