• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்கள் இன்னும் பல சாதனைகளை பெண்கள் புரிய வேண்டும் – அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

March 11, 2022 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற விழாவில் பேசிய, தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதாகவும், இன்னும் பல சாதனைகளை பெண்கள் புரிய வேண்டும் என்றார்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரி வளாகத்தில்,பெண்கள் மெருமையை போற்றும் விதமாக மிளிர் எனும் சிறப்பு விழா நடைபெற்றது.ரத்தினம் குழும அறங்காவலர் ஷீமா செந்தில் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் மருத்துவம்,கல்வி,அறிவியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் சாதித்து வரும் பெண்களுக்கு சாதனையாளர் விருதை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கி பேசினார்.

அப்போது அவர்,

தாம் பொது வாழ்விற்கு வருவதற்கு முன் குடும்பத்தை நிர்வகித்து வந்ததாகவும், எந்த பணியாக இருந்தாலும் பெண்களால் அதில் திறம்பட செயலாற்ற முடியும் என தெரிவித்தார். தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதாகவும், இன்னும் பல சாதனைகளை பெண்கள் புரிய வேண்டும்,என்றார்.

விழாவில்,அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இளம் பெண் வேட்பாளர் நிவேதா சேனாதிபதிக்கு விருது வழங்கப்பட்டது.இதில்,துணை மேயர் வெற்றிசெல்வன், ரத்தினம் குழும தலைவர் மதன் செந்தில்,தெற்கு மண்டல மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க