July 10, 2017
தண்டோரா குழு
பிரிட்டன் நாட்டில் ஆண் ஒருவர் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் பெண்ணாக பிறந்த பேஜ், இளம் வயதில் அவருடைய உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாறுதல் காரணமாக, தான் ஒரு ஆண் என்று உணர்ந்தார். முழு ஆணாக மாறும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், தன்னுடைய கருப்பையை அகற்ற மறுத்துவிட்டார். தன்னுடைய பெயரை ஹய்டேன் கிராஸ்(21) என்று மாற்றிக்கொண்டார்.
எதிர்காலத்தில் தனக்கு குழந்தை வேண்டும் என்பதால், தன்னுடைய கருமுட்டைகளை, அதற்கான வங்கியில் சேமிக்க முடிவு செய்தார். ஆனால் தேசிய சுகாதார அமைப்பு அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து, இணையதளமான பேஸ்புக் மூலம், ஆண் விந்தை நன்கொடை செய்யும் ஒருவரை கண்டுபிடித்தார். பின்னர் அந்த விந்தணு அவருடைய கருவில் செலுத்தப்பட்டது. இதனால் அவர் கர்ப்பம் அடைந்து, குளூசெஸ்ட்டர்ஷைர் ராயல் மருத்துவமனையில் கடந்த ஜூன் 16 ஒரு அழகிய பெண் குழந்தையை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தார்.