April 13, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத் (எ) ஆண்டி பண்டாரம் (38). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கழுத்தை நெரித்துக் கொன்றார்.
இந்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் காவல் நிலையத்தில் வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று வினோத்க்கு 22 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 2,000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.