September 6, 2017 தண்டோரா குழு
கோவையில் பெண் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்த புகாரில், உதவி ஆணையர் ஜெயராமன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடந்த மாணவர் போராட்டத்தின் போது பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளரிடம் , மத்திய சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் ஜெயராமன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள்வாட்ஸ்ஆப் மற்றும்சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனையடுத்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து இந்த விவாகரம் குறித்து உதவிஆணையர் ஜெயராமனிடம் சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ காட்சிகள் குறித்து கோவை மாநகர சட்டம் ஓழுங்கு துணை ஆணையர் லட்சுமி உதவிஆணையர் ஜெயராமனிடமும், பெண் உதவி ஆய்வாளரிடமும் விசாரணை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான உதவி ஆணையர் ஜெயராமன் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்க டிஜிபி உத்திரவிட்டுள்ளார்.
எனினும், அவரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோவை மாந்கர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.துறை ரீதியாக விசாரணைக்கு பின்னரே அவர் மீதான நடவடிக்கை தெரியவரும்.