• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண் காட்டு யானை இறந்தது எப்படி -மருத்துவ குழுவினர் அறிக்கை !

March 20, 2023 தண்டோரா குழு

ஆனைமலை புலிகள் காப்பகம்,கோவை கோட்டம் காரமடை வனச்சரகப் பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் வாய் பகுதியில் காயங்களுடன் சுற்றித் திரிந்த பெண் காட்டு யானையினை 17.03.2023 ம் தேதி சதாசிவம் , சத்தியமங்கலம், சுகுமார் கோவை ஆகிய வனக்கால்நடை மருத்துவ குழுவினரால் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி என்ற துறை கும்கி யானையால் பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சிக் கோட்டம் , உலாந்தி வனச்சரகம் வரகளியார் யானைகள் முகாமில் உள்ள கிராலில் சிகிச்சைக்காக விடப்பட்டது .

18.03.2023 ம் தேதி உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் , அட்டகட்டி மற்றும் வனச்சரக அலுவலர் , உலாந்தி ஆகியோரின் முன்னிலையில் விஜயராகவன், உதவி வனக்கால்நடை மருத்துவ அலுவலர், பொள்ளாச்சிக் கோட்டம் அவர்களால் கிராலில் உள்ள பெண் காட்டு யானைக்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கினார்.19.03.2023 ம் தேதி இராமசுப்பிரமணியன் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர்,ஆனைமலை புலிகள் காப்பகம் , கோவை மற்றும் வனச்சரக அலுவலர் , உலாந்தி ஆகியோரின் முன்னிலையில் மனோகரன் , உதவி இயக்குநர் (ஓய்வு) மற்றும் விஜயராகவன் , உதவி வனக்கால்நடை மருத்துவ அலுவலர் பொள்ளாச்சிக் கோட்டம் அவர்களால் யானைக்கு சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8.00 மணியளவில் கிராலில் சிகிச்சையில் இருந்த பெண் காட்டு யானை இறந்து விட்டது. அதனைத் தொடர்ந்து உயர் அலுவலர்களுக்கு வனச்சரக அலுவலர் , உலாந்தி அவர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டு 20.03.2023 ம் தேதி காலை செல்வன் , உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் , அட்டகட்டி , மு . சுந்தரவேல் , வனச்சரக அலுவலர் . உலாந்தி , மதன் மோகன் , தன்னார்வலர் . நேச்சுரல் இன்ஸ்டியூசன் ஆப் டிரஸ்ட் ஆகியோரின் முன்னிலையில் சுகுமார் வனக்கால்நடை மருத்துவ அலுவலர் , கோவை ,விஜயராகவன் . உதவி வனக்கால்நடை மருத்துவ அலுவலர் . பொள்ளாச்சிக் கோட்டம் மற்றும் செந்தில்நாதன் .உதவி கால்நடை மருத்துவ அலுவலர் அடங்கிய மருத்துவக் குழுவினரால் இறந்த பெண் காட்டு யானைக்கு உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் யானையானது வெடி மருந்தினை உதால் வெடி மருந்து வெடித்து யானையின் தாடை மற்றும் பற்கள் சேதமடைந்து விட்டது . இதனால் யானையினால் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் பலவீனமாக இறந்து விட்டதாக மருத்துவக் குழுவினரால் அறிக்கை செய்யப்பட்டுள்ளது .

மேலும் படிக்க