March 15, 2017 தண்டோரா குழு
துருக்கியில் பிறந்த பெண் குழந்தைக்கு “ஆம்” என்று அதன் பெற்றோர் பெயரிட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயரைப் பெற்றோர் தேடி வைப்பது வழக்கம். ஆனால், துருக்கி நாட்டின் தியார்பகிர் மாகணம் ஏர்கனி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களுடைய பெண் குழந்தைக்கு ‘எவட்’ என்று பெயரிட்டனர். அந்த பெயருக்கு துருக்கி மொழியில் ‘ஆம்’ என்று அர்த்தம்.
அந்நாட்டின் அதிபர் தயீப் எர்டோகனின் ஆதரவாளர் முஸ்தபா, அந்நாட்டின் வரவிருக்கும் பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தன்னுடைய மகளுக்கு வித்யாசமான பெயரை வைத்துள்ளார்.
“என்னுடைய மகளுக்கு இப்படிப்பட்ட ஒரு பெயரை வைத்தது குறித்து நான் வருத்தப்படவில்லை” என்று முஸ்தபா கூறினார்.
அதன் தாய் சொங்குல் செலிக் கூறுகையில், “வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் விதமாக இந்த பெயரை முடிவெடுத்தோம். எங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும் நிலையாகவும் இருக்கிறது” என்றார்.