December 19, 2021 தண்டோரா குழு
பெண் தொழில்முனைவோருக்காக பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேக ஒரு நாள் விற்பனை மற்றும் கண்காட்சியகம் பாப் அப் மற்றும் பேக்கர்ஸ் அண்ட் மேக்கர் இணைந்து வின்டர் ஒண்டர்லாண்ட் ( Winter Wonderland) என்ற நிகழ்வினை இன்று கோவை பந்தய சாலை ரிதம் ஹாலில் நடத்தியது.
இந்த நிகழ்வில் உணவு,ஆடை,வீட்டு அலங்காரம்,இனிப்புகள்,விளையாட்டுகள் என 28 அரங்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரங்குகளிளும் பெண் தொழில் முனைவோரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் துவக்க விழாவில் பார்க் நிறுவனங்கள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் ( பிரச்சாரம் ) அனுஷா ரவி மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவளக்கேற்றி
நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, ‘வின்டர் ஒண்டர்லாண்ட்’ இணையத்தை சிறப்பு விருந்தினரர்கள் வெளியிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாப் அப் குழுவின் தலைவர் ஜெனிடா, பேக்கர்ஸ் அண்ட் மேக்கர்ஸ் குழுவின் தலைவர் மானசி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில்,
இதன் முக்கிய நோக்கம் பெண் தொழில் முனைவோரின் வணிகத்தை வெளிப்படுத்தவும் , ஊக்குவிக்கவும் ஒரு தளத்தை உருவாக்குவதாகும். முதல் முறையாக இந்த ‘வின்டர் ஒண்டர்லாண்ட்’ விற்பனை மற்றும் கண்காட்சி கோவையில் நடத்தப்பட்டது. இந்து இருபத்தி எட்டு அரங்குகளில் பெண்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை மற்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது ஒருநாள் மற்றும் நடைபெறும்.இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொண்டனர்.
பெண் முனைவோருக்கான வின்டர் ஒண்டர்லாண்ட் ( Winter Wonderland ) இந்த பாப் அப் நிகழ்வில் பங்கு பெறும் அனைவருக்கும் அனுமதி இலவசம். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றனர்.