• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேங்க் ஆப் இந்தியா வங்கியின் உலகளாவிய வணிகம் 13.64 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது – பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் ரஜ்னீஷ் கர்நாடக்

October 10, 2024 தண்டோரா குழு

பேங்க் ஆப் இந்தியா வங்கியின் உலகளாவிய வணிகம் 13.64 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும்,அடுத்த மூன்று ஆண்டுகளில் 18 லட்சம் கோடி ரூபாய் வணிகம் எட்டுவதற்கான திட்டம் இருப்பதாக பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரஜ்னீஷ் கர்நாடக் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வர்த்தக மேம்பாடு குறித்த கோவை மண்டல கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இதில் கோவை உட்பட சென்னை மண்டலத்தை சேர்ந்த வங்கியின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரஜ்னீஷ் கர்நாடக் வங்கியின் பல்வேறு வளர்ச்சிகள் மற்றும் வணிக மேம்பாட்டு திறனை அதிகபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பேங்க் ஆப் இந்தியாவின் பல்வேறு திட்டங்கள் குறித்தும்,டிஜிட்டல் மயமாதில் வாடிக்கையாளர்களின் பயன்கள் குறித்தும் பேசினார்.2024 ஆம் ஆண்டு கணக்கின்படி,
வங்கியின் உலகளாவிய வணிகம் ரூ.13.64 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக கூறிய அவர்,அடுத்த மூன்று வருட காலத்திற்குள் ரூ.18 லட்சம் கோடி ஆக வணிகம் எட்டுவதற்கான திட்டத்தையும் விரிவுரைத்தார்.

பேங்க் ஆஃப் இந்தியாவின் 119 வது நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில்,சிறப்பு முத்திரையை இந்திய அஞ்சல் துறை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது வங்கியின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பெருமைமிக்க தருணம் என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக,விரைவாக வளர்ந்து வரும் கோவை மண்டலத்தில் MSME மற்றும் கார்ப்பரேட் ஃபைனான்ஸ் அதிகரித்து வருவதாக சுட்டி காட்டிய அவர்,இங்கு வங்கியின் வணகத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களுக்கான கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தி்ல் கோவை,சென்னை,மதுரை உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள், ஊழியர்கள்,வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க