June 23, 2017 தண்டோரா குழு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளனின் பரோலுக்கு ஆதரவு தெரிவிக்க கோரி சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலினை, அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தனியரசு,தமீமுன் அன்சாரி சந்தித்தனர்.
பேரறிவாளன் உடல் நலகுறைவால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பரோலில் வர மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை .இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர அவர்கள் மூவரும் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளனர்.
இதனிடையே இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை சட்டப்பேரவையில் சந்தித்து அவர்கள் பேசினார்கள். அதன் பின் பேரறிவாளனை பரோலில் விட கோரும் மனுவினை ஸ்டாலினிடம் கொடுத்து ஆதரவு கேட்டனர்.
முன்னதாக மு.க.ஸ்டாலினை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் சந்தித்து பேசினார் என்பது குறிப்படத்தக்கது.