April 19, 2022 தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி தமிழ்நாடு கமாண்டோ பள்ளியில் வழங்கப்படுகிறது.
பழனியில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளியில் 4.4.22 முதல் 16.4.22 வரை நடைபெற்ற இந்த முகாமில் கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் இருந்து 7 பேர் பங்கு பெற்றனர். இந்த முகாமில் சிறப்பாக பங்கேற்று அங்கு நடைபெற்ற தேர்வுகளில் முதல் பரிசை வென்ற, கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் துடியலூர் யூனிட்டை சேர்ந்த HG400 அங்கையர் சேதுநாதன் முதல் பரிசு பெற்றுள்ளார்.தமிழ்நாடு கமாண்டோ பள்ளியின் முதல்வர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
இந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமில் பங்கேற்ற ஊர்க்காவல் படையினர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஐபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் பாலாஜி ராஜு கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.