• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரூரில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுவர்களை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

March 11, 2022 தண்டோரா குழு

கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் வயது 46. இவரது மனைவி பாக்கியலட்சுமி (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். சரவணன் ஈரோடு மாவட்டம் தாளவாடி மல்லாங்குழியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார்.

இவர் யாகம் வேள்வி ஆகியவற்றை வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் மற்றும் தமிழகம் முழுவதும் சென்று மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ம் தேதி இவர் ஈரோட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்து இருந்தார்.8-ம் தேதி காலை சரவணன் தனது வீட்டு முன்பு நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு காரில் அடையாளம் தெரியாத 5 பேர் வந்தனர். அவர்கள் இவரது அருகில் வந்து தாங்கள் போலீசார் என அறிமுகம் செய்து கொண்டனர்.

பின்னர் உங்கள் மீது பேரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவாகி இருப்பதாகவும் வழக்கு விசாரணைக்கு உடனடியாக வருமாறு அழைத்தனர்.அதற்கு சரவணன் உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள் நான் வருகிறேன் என்று கூறினார். இதில் 5 பேருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர்கள் சரவணனை தாக்கி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி காரில் கை, கால்களை கட்டி போட்டு கடத்திச் சென்றனர். பின்னர் அவரை பழனி மலை அடிவாரத்திலுள்ள சாரதா ஆசிரமத்தில் அடைத்து வைத்தனர்.

அங்கு வைத்து அவரை தாக்கி துன்புறுத்தினர். பின்னர் சரவணனின் செல்போனை பறித்து அவரது மனைவியை தொடர்பு கொண்டு உங்களது கணவரை நாங்கள் தான் கடத்தி வைத்துள்ளோம். அவர் உங்களுக்கு உயிரோடு வேண்டுமென்றால் ரூ 1 கோடி பணம் மற்றும் 100 பவுன் தங்க நகைகள் வேண்டும் எனக்கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் அவரை மீண்டும் தொடர்பு கொண்டு நாங்கள் சொல்லும் இடத்திற்கு உடனடியாக பணத்துடன் வரவேண்டும் எனவும் இந்த விஷயங்களை போலீசில் சொன்னால் உங்களது கணவர் உயிரோடு இருக்கமாட்டார் எனக் கூறி மிரட்டினர்.

அதற்கு பாக்கியலட்சுமி தன்னிடம் ரூ.35 லட்சம் மட்டுமே பணம் இருப்பதாகவும் நீங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து கொடுப்பதாக கூறினார். இதனையடுத்து பாக்கியலட்சுமி அந்த மர்ம நபர்கள் திருச்செங்கோடு வந்துவிட்டு அழைக்கவும் எனக் கூறினர். அதன்படி அவர் மர்ம நபர்கள் சொல்லும் இடத்திற்கு வந்து காத்திருந்தார். ஆனால் அவர்கள் அங்குமிங்குமாக பாக்கியலட்சுமி அலையவிட்டனர்.

பின்னர் சங்ககிரி ரோட்டில் உள்ள மணல் மேட்டில் பணத்தை வைத்துவிட்டு செல்லுமாறு கூறினர்.உங்களது கணவர் கால் டாக்ஸி மூலமாக வீட்டிற்கு வந்துவிடுவார், நீங்கள் திரும்பிப் பார்க்காமல் செல்லுங்கள் எனக் கூறினர்.இதனையடுத்து பாக்யலட்சுமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.அவர் வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் சரவணனும் வீட்டிற்கு வந்து சேர்ந்த பின்னர் 2 பேரும் இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு நடத்திய விசாரணையில் ஏற்கனவே சரவணனின் ஆசிரமத்தில் வேலை பார்த்த ஈரோட்டை சேர்ந்த விக்கி என்ற வெள்ளை விக்கி உள்பட 5 பேர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் கடத்தல் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கடத்தல் கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க