March 3, 2016 gizbot.com
சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் புதுவிதமான ரியாக்ஸன் ஸ்மைலி இந்தியாவில் வெளியானது. இதற்கு முன்பு இது போன்ற சிறப்பம்சங்கள் கொண்டு பேஸ்புக் இயங்கவில்லை. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்தச் சிறப்பம்சங்கள் உள்ளடங்கிய ரியாக்ஸன் ஸ்மைலி வெளியிடப்பட்டது. தற்போது சில தினங்களுக்கு முன்பு இந்தியாவிலும் இது வெளியானது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேஸ்புக்கில் லைக் செய்வதற்கே பொத்தான் அமைக்கப்பட்டிருந்தது, ஆனால் டிஸ்லைக் செய்வதற்கான பொத்தான் இல்லை. அதன் காரணமாகத்தான் தற்போது புதுவிதமான ரியாக்ஸன் ஸ்மைலி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் மற்றவர்களது போஸ்ட்ஐ நமது விருப்பத்திற்கேத்த முறையில் நமது உணர்ச்சிகளை ரியாக்ஸன் ஸ்மைலி மூலம் வெளிப்படுத்தலாம்.
இந்த புதுவித ரியாக்ஸன் ஸ்மைலி இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் அணைத்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குருந்தகவல்களான wechat, hike, whatsapp, messenger போன்றவற்றில் அதிக உணர்ச்சிகள் கொண்டுள்ளன. ஆனால் பேஸ்புக்கில் இதுவரை அப்படி ஒரு ரியாக்ஸன் ஸ்மைலி இடம்பெறவில்லை. ஆனால் தற்போது அதன் குறை நீங்கிவிட்டது.
முதன் முதலில் இந்த புதுவித ரியாக்ஸன் ஸ்மைலி பிரிட்டனில் தான் வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் இந்தியாவிலும் வெளியிடப்பட்டது. பேஸ்புக் மெசன்ஜரில் முன்னரே இதுபோன்ற ரியாக்ஸன் ஸ்மைலி இருந்துள்ளது. ஆனால் அவையனைதும் கணினியில் பயன்படுத்த முடியாது. அது அனைத்தும் ஸ்மார்ட்போனில் மட்டும்தான் பயன்படுத்தமுடியும். தற்போது அதில் சிலவற்றை கணினியில் சுலபமாக பயன்படுத்தலாம்.
தற்போது பேஸ்புக் சாட்டில் டிஸ்லைக் செய்ய புதுவித குறி இடம்பெற்றுள்ளது ஆனால் அது லைக் பொத்தான் போல் கிடையாது. தற்போது வெளியிட்டுள்ள ரியாக்ஸன் ஸ்மைலியானது மக்களிடம் நல்லவரவேற்பை பெற்றிருந்தாலும் அதிக அளவில் ரியாக்ஸன் ஸ்மைலி இல்லாமல் குறிப்பிட்ட அளவே உள்ளதால் மக்கள் அனைவரும் அதிக அளவு ரியாக்ஸன் வர காத்திருக்கின்றனர். இருப்பினும் 5 புதிய ரியாக்ஸன் ஸ்மைலி இடம்பெற்றுள்ளதால் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.