December 30, 2017 தண்டோரா குழு
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புத்திட்டம் ஜனவரி 5ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு 1கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.210 கோடியில் பொங்கல் பரிசை முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,கரும்புத்துண்டு,முந்திரி–திராட்சை உள்ளிட்டவை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
மேலும், பொங்கல் திருநாளுக்கு முன்பே நியாய விலைக்கடைகளில் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த பரிசு தொகுப்புத்திட்டம் ஜனவரி 5ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.