July 17, 2017
தண்டோரா குழு
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது .
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கும் நிலையில் , 583 கல்லூரிகளில் இருக்கும் ஒரு லட்சத்து 67 ஆயிரம் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். விளையாட்டு பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று முன் தினம் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
தொழிற்கல்வி மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்றும் நாளையும் கலந்தாய்வு நடைபெறுகிறது.மேலும் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை.23-ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.