July 8, 2022
தண்டோரா குழு
பொள்ளாச்சி கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி வயது 65, இவரும் இவரது மகனும் நேற்று முன்தினம் நெகமம் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு வந்து பணிகளை முடித்துவிட்டு இரவு தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக கோவில்பாளையம் ரோட்டில் வந்து கொண்டு இருக்கும் போது காணியாலாம்பாளையம் பிரிவு அருகே ரோட்டின் குறுக்கே நாய் ஓடி வந்ததால் காரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மின்சார கம்பம் மீது மோதியது. இதில் மின்சார கம்பம் இரண்டாக முறிந்தது கார் மின் கம்பம் மீது ஏறி நின்றது. உடனடியாக மின்சார வாரியம் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டது ஆட்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.நேற்று காலையில் புதிய மின் கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது