November 17, 2024 தண்டோரா குழு
பொள்ளாச்சி பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்.
கோவை மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.அதன் அடிப்படையில் இன்று (17.11.2024) பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் சம்பவம் இடமான கோபாலபுரம் சோதனை சாவடி அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த வால்பாறை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்திரசேகரன் (46) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூபாய் 1,74,000 /- மதிப்புள்ள 4800 No’s தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து
மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.