• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

February 12, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை ஒரு கும்பல் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தது.

இந்த கும்பலிடம் மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி,பொள்ளாச்சி முன்னாள் அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு ஆகியோரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் பாதுகாப்பு கருதி சேலம் சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்க