April 24, 2017 தண்டோரா குழு
நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்கும் பால் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிக அமைப்புகளும் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
இந்த போராட்டம் தேவையற்றது, ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்கவே இது நடத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்த போராட்டத்தால் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம், புயலின்போது கூட பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதனால் நாளை தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இருக்காது.நாளை பால் விநியோகம் செய்ய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றார். மேலும், போராட்டத்தில் பங்கேற்கும் பால் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.