July 11, 2017 தண்டோரா குழு
போரூர் ஏரியிலிருந்து அதிநவீன முறையில் தண்ணீரை சுத்திகரித்து விநியோகிக்கும் திட்டத்தை உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
சென்னையில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, போரூர் ஏரியில் உள்ள நீரை சுத்திகரித்து சென்னை மக்களின் குடிநீர் விநியோகத்துக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் போரூர் ஏரியில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டத்தின் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் இந்த இயந்திரங்களின் மூலமாக சுத்திகரித்து விநியோகிக்கப்படும்.
மேலும், தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்