November 16, 2022 தண்டோரா குழு
போர்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி மின்சார துறை அமைச்சர் லங்கா கார்னர் பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு போர்கால அடிப்படையில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அமைச்சரின் உத்தரவிற்கிணங்க கோவை மாநகராட்சி பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக லங்கா கார்னரில் தூர்வாரும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.