June 10, 2017 தண்டோரா குழு
ஜெர்மனியில் போலி விஸ்கியை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் செயற்கை நாக்கை உருவாகியுள்ளனர்.
தரமான பொருட்கள் எது போலியான பொருட்கள் எது என்று கண்டறிய பல இயந்திரங்களும் தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலி விஸ்கியை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் செயற்கை நாக்கை உருவாகியுள்ளனர்.
இது குறித்து ஜெர்மனியின் “Heidelberg University” கூறுகையில்,
“விஸ்கியின் தர அடையாளம், அதன் தயாரிப்பின் காலம், எந்த நாட்டில் தோன்றியது, அதன் வகைகள் ஆகியவை குறித்து இந்த செயற்கை நாக்கால் கண்டுப்பிடிக்க முடியும். விஸ்கியிலுள்ள ரசாயன கலவையை கண்டுப்பிடிக்க தற்போது பல புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வகையில், இந்த செயற்கை நாக்கின் மூலம் சுமார் 22 விதமான சுவையை கண்டறிய முடியும்” என்று தெரிவித்தார்.