August 31, 2017 தண்டோரா குழு
ப்ளு வேல் கேம் விளையாட்டால் மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட புளூ வேல் எனப்படும் விபரீத விளையாட்டால் தொடர்ந்து பல உயிர்கள் பலியாகி வரும் நிலையில்,தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் இந்த விளையாட்டு மூலம் உயிரிழந்துள்ளார்.
புளுவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, 50 சுற்றுகள் கொண்ட விளையாட்டில்,தங்களை படிப்படியாக துன்புறுத்திக் கொள்ள வேண்டும்.இறுதியில் ஏதேனும் ஒரு வகையில் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த விளையாட்டின் விதிமுறை.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தகவல் அறிந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவரது வலது கையில் திமிங்கலத்தின் உருவத்தை வரைந்திருந்தார். மேலும் அவரது நோட்டுப்புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த புளுவேல் விளையாட்டு தான்,அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ப்ளு வேல் கேம் விளையாடும் இளைஞர்களை காப்பாற்ற, ப்ளு வேல் கேம் விளையாட்டால் உயிரிழந்த மதுரையை சேர்ந்த விக்னேஷின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.