• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ப.சிதம்பரம் 77 வது பிறந்தநாளையொட்டி கோவையில், கோவில்களில் சிறப்பு பூஜை

September 16, 2022 தண்டோரா குழு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் மத்திய நிதியமைச்சர்
ப.சிதம்பரம் 77 வது பிறந்தநாளையொட்டி கோவையில், கோவில்களில் சிறப்பு பூஜை
ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னான் மத்திய நிதியமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்,நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் 77 வது பிறந்தநாளையொட்டி,அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹரசுதன் தலைமையில் கோவையில் சிறப்பு பூஜைகள், வழிபாடு,அன்னதானம்,என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். எம்.என்.கந்தசாமி,ஐ.என்.டி.யூ.சி . பொதுச்செயலாளர் கோவை செல்வன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், முன்னதாக பீளமேடு ஸ்ரிங்கார் நகர் சீரடி துவாரகமாகி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து,உக்கடம் ஜி.எம்.நகரில் உள்ள டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.பின்னர்,ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.தொடர்ந்தி, மதியம் திருச்சி ரோட்டில் உள்ள ஜங்கிள் பீர் அவுலியா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

தொடர்ந்து,மாலை காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்,மாவட்ட பொருளாளர் சௌந்தர குமார்,பேரூர் திருமூர்த்தி, சோபனா செல்வன், கருணாகரன், ஜெரி லூயிஸ்,தென்றல் நாகராஜ், intuc ராகவன்,intuc மதியழகன், வடவள்ளி பாலு, பார்த்திபன், கருடா பாலு, காமராஜ், வீரா ராம்குமார், குணசேகர்,லக்ஷ்மண சாமி, டென்னிஸ் செல்வராஜ், காந்தி, தவுலத் கான், இமயம் ரஹ்மத்துல்லா , ஜோதி முத்துக்குமார், ஜமாலுதீன், தனபால், சிரில், மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க