June 10, 2017 தண்டோரா குழு
கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய நமது தேசதந்தை மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
1946ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த “Indian Passive Resistance Campaign” போராட்டத்தின் 7௦ம் ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்தியர்கள் யாரும் நிலமோ, வீடோ, சொத்துக்களோ வாங்கக்கூடாது என்ற பிரிட்டிஷ் அரசின் “கெட்டோ” சட்டத்தை எதிர்த்து 1947ம் ஆண்டு பெரிய போராட்டம் நடைப்பெற்றது.இந்த போராட்டத்தின் 70ஆம் ஆண்டு நினைவாக இந்த போராட்டம் நடைபெற்ற டர்பன் இடத்திலுள்ள “Freedom Park”ல் நடைபெற்றது.இவ்விழாவில் மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் தனிராம் மூல்சந்த்(90) கலந்துகொண்டு உயிர் தியாகம் செய்தவர்கள் நினைவாக டர்பன் சுதந்திரப் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார்.
இது குறித்து விருது பெற்ற எலா காந்தி கூறுகையில்,
“மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்தபோது, சத்தியாக்கிரக கோட்பாடுகளை உருவாக்கினார். ‘Passive Resistance Campaign’ மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடிய போராட்டம். அதன் பிறகு, சத்தியாக்கிரகத்திற்கும் அதே கொள்கையை அவர் பயன்படுத்தினார்” என்று கூறினார்.