• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம்

July 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீதகிருஷ்ணன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களிடம் இருந்து புகார்களை பெற்று அதனை பரிசீலித்து 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரச்னை நடக்கும் இடத்திலேயே விசாரணை நடத்தலாம்.

வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஊதியத்தை தாமதமாக வழங்குதல் தொடர்பான பல குறைகளை தானாக முன்வந்து நடவடிக்கைகளை குறைதீர்ப்பாளர் மேற்கொள்வார். மாவட்ட குறைத்தீர்ப்பாளர் நவநீதகிருஷ்ணனை கைபேசி எண் – 9443474364 மூலமாக அணுகலாம். எழுத்து வடிவிலான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் குறைத்தீர்ப்பாளரிடம் நேரில் ஒப்படைக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க