• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா ?

March 21, 2017 தண்டோரா குழு

சர்வதேச மகிழ்ச்சி தினம் மார்ச் 2௦-ம் தேதி கொண்டாடப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் உலகளவில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது.

ஒரு நாட்டின் தனி நபர் வருமானம், ஆரோக்கியம், சமூக ஆதரவு, சுதந்திரம், மக்களின் நிலை, ஆயுட்காலம், பெருந்தன்மை மற்றும் ஊழல் உணர்வுகள் ஆகியவற்றை மகிழ்ச்சியின் அளவு கோல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன.

155 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டு இந்த பட்டியல் திங்கள்கிழமை(மார்ச் 2௦) வெளியிடப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக,டென்மார்க் நாடு தொடர்ந்து முன்னிலையிலிருந்தது. ஆனால் இந்த ஆண்டு நார்வே முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இருந்த நிலையிலிருந்து மூன்று இடம் முன்னேறி இவ்வாண்டு நார்வே முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின்படி இந்தியாவின் அண்டைய நாடுகளான சீனா 79-வது இடத்திலும், பாகிஸ்தான் 80-வது இடத்திலும், நேபால் 99-வது இடத்திலும், வங்கதேசம் 11௦-வது இடத்திலும் உள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 118-வது இடத்தில் இருந்த இந்திய தற்போது 122-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 1௦ இடத்தை பிடித்த நாடுகள் நார்வே,டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்த், நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் ஸ்வீடன் ஆகும்.

மேலும் படிக்க