• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்களாட்சியின் மாண்பை சிதைக்கும் செயல் – மு.க ஸ்டாலின்

February 9, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிணைக் கைதிகள் போல் சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை;d சிதைக்கின்ற செயலாக இருக்கிறது என சட்டப்பேரவை எதிர்க்கட்சிld தலைவர் மு.க ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“தமிழகத்தின் அரசியல் சூழல் நிலையற்ற தன்மையுடனும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராகவும் உள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநரின் வருகையும் அவர் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், “கட்டாயப்படுத்தி என்னிடம் ராஜினாமா கடிதம் வாங்கினார்கள்” என்று தனது கட்சித் தலைமையின் மீது புகார் தெரிவித்துள்ளார்.
அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க.வின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், அவர்களைச் சொகுசுப் பேருந்துகளில் ஏற்றிச் சென்று, நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் இப்படி பிணைக் கைதிகள் போல் சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது. பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை உள்ளது.
இத்தகைய சூழலில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அவர்கள் மாநிலத்தில் நிலையான, சுதந்திரமான, சட்டப்பூர்வமான வழியில் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார். எனவே, ஆளுநர் சட்ட ரீதியிலான முடிவுகளை எடுத்து சுதந்திரமான சட்டப் பேரவை வாக்கெடுப்பை உறுதி செய்ய வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க