June 16, 2017
தண்டோரா குழு
மக்களின் பாதுகாப்புக்காகத் தான் காவல்துறை, மதுக்கடைக்கு அல்ல எனவும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுபவர்கள் விஷமிகளா எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளனர்.
டாஸ்மாக் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தனர். அப்போது, பெண்களும், குழந்தைகளும் போராடுவதை மீடியாக்களில் நாங்கள் தினமும் பார்க்கிறோம்.
போராட்டம் நடத்தும் மக்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு ஒரு எல்லை உண்டு.டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் மக்கள் விஷமிகளா? என நீதிபதிகள் கிருபாகரன்,பார்த்திபன் கேள்வி எழுப்பினர்.
மேலும், போராடும் மக்களின் பாதுகாப்புக்காகத் தான் காவல்துறை, மதுக்கடைக்கு அல்ல.
மதுக்கடைக்கு எதிராக போராடும் பெண்களை தாக்கக் கூடாது எனவும் டாஸ்மாக் விவகாரத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன எனவும் அவர்கள் கூறினர்.