September 11, 2017 தண்டோரா குழு
மக்களை பாதிக்ககூடிய சட்டங்களை அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும்என இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள சோகோ என்ற அறக்கட்டளை சார்பில் ஓவ்வொரு வருடம் மறைந்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வருடம் இந்தியாவின் இரும்பு பெண் என்றழைக்கப்படும் இரோம் ஷர்மிளாவிற்கு அவ்விருது வழங்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து பேசிய அவர்,
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீக்ககோரி 16 ஆண்டுகள் அறப்போர் நடத்தியமைக்கு தற்போது எனக்கு விருது வழங்குவது மகிழ்ச்சி .இந்த விருது எனக்கு மட்டும் இல்லை சமூக அமைப்புகள் , போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அனைருக்கும் சமர்ப்பணம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளது. பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஒரு கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.கரூத்து சுதந்திரத்திற்காக போராட கூடிய அனைவருமே கௌரி லங்கேஷ் தான்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் சம உரிமை வழங்கியுள்ளது.ஆனால் அடக்கு முறை தான் அதிகம் உள்ளது.நீட் தேர்வு தோல்வியால் அனிதா உயிரிழந்தது வருந்ததக்கது. கல்வி மாநில கொள்கையில் பிரச்சனை. மக்களை பாதிக்ககூடிய சட்டங்களை அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.