August 4, 2017 தண்டோரா குழு
மக்கள் வறுமையில் வாடுகையில்எம் எல் ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் வறுமை, விவசாயி தற்கொலை, கல்விக்கட்டணம் செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி மதுரை ஐகோர்ட் கிளையில் ரமேஷ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை , தமிழகத்தின் நிலை குறித்து மனுதாரர் கூறியதை ஆதாரமாக தாக்கல் செய்யவில்லை. சட்டரீதியான கருத்துகள் முன் வைக்கப்படவில்லை எனக்கூறி, தள்ளுபடி செய்தது.
மேலும், எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வு அறிவிப்பு அரசின் நிர்வாக நீதியிலானது என்பதால் தலையிட முடியாது.தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு சரியா என எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வறுமையில் வாடுகையில்எம் எல் ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.