March 23, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்19க்குட்பட்ட மணியகாரம்பாளையத்தில் சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவங்கி வைத்து ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம், பாலமுருகன் நகர், அசோக் நகர், அம்மன் நகர், அசோக் நகர் பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பூங்காக்களை சீரமைத்து அப்பகுதியில் ஆர்வமுள்ள குடியிருப்போர் நலச்சங்கத்திடம் வழங்கிடவும், . சீரான குடிநீர் விநியோகம் செய்யுமாறு உதவி பொறியாளர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியின் சாலையோரங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றுதல், தேங்கிய குப்பைகளை அகற்றுதல், மழைநீர் வடிகால் கால்வாயில் தேங்கியுள்ள செடி கொடிகளை அகற்றிடவும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும் சிறப்புத்தூய்மைப்பணியின் மூலம் சேகரமாகும் குப்பைகளை உடனடியாக வாகனம் மூலம் ஏற்றி அப்புறப்படுத்த வேண்டும் என மேயர் கல்பனா ஆனந்தகுமார் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது 31வது வார்டு கவுன்சிலர் வைரமுருகன், வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.