November 7, 2022
தண்டோரா குழு
கோவை மாநகர பகுதியில் சமீப காலமாக போஸ்டர் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் திமுகவினர் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
இதே போல கோவை ரயில் நிலையம் பகுதியில் மத்திய மாவட்டம் மக்கள் நீதி மயத்தினர் நவம்பர் 7ல் பிறந்தநாள் காணும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும் எனவும், மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே நம்மவரே! நீ வாழ்க பல்லாண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.