October 27, 2024 தண்டோரா குழு
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று (27.10.2024) மதுக்கரை பகுதியில் கஞ்சா, கஞ்சா சாக்லேட் மற்றும் மெத்தம்பெட்டமைன் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் துறையினர் மைல்கல் அறிவொளி நகர் அருகே சென்று சோதனை மேற்கொண்டு போது கஞ்சா, கஞ்சா சாக்லேட் மற்றும் மெத்தம்பெட்டமைன்கள் விற்பனைக்கு வைத்திருந்த குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த விஜயராகவன் மகன் விசாகன் (23) திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரன் மகன் பிரதீஷ் (21), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பரமசிவன் மகன் கீர்த்தி ராஜா (21), சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் மகன் அஸ்வின் லோகேஷ் (24) மற்றும் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த காஜா உசேன் மகன் சானபார் (28) ஆகியோர்களை கைது செய்த அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, 1.200 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட் , 1 கிராம் மெத்தம்பெட்டமைன்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.