June 7, 2017 தண்டோரா குழு
கலிபோர்னியாவின் ஆர்காடியா நகரில் மதுபானக்கடை ஒன்றில் பெண் மயில் புகுந்து, சுமார் 5௦௦ டாலர் மதிப்புள்ள மது பாட்டில்களை சேதப்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தின் ஆர்காடியா நகரில் Royal Oaks Liquor Store என்னும் மதுக்கடையில், திங்கள்கிழமை(ஜூன் 5), பெண் மயில் ஒன்று கடைக்குள் பறந்து வந்துள்ளது. அந்த கடையின் உரிமையாளர் ராணி அதை பிடித்து வெளியே அனுப்ப முயன்றுள்ளார். ஆனால், அவரால் முடியவில்லை.உடனே அவசர உதவி 911 எண்ணை தொடர்புக்கொண்டு நிலையை விளக்கியுள்ளார்.
இது குறித்து விலங்கு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விலங்குகளை பிடிக்கும் வலைகளை கொண்டு அதை பிடிக்க முயன்றனர். இங்கும் அங்குமாக பறந்த மயில், மதுப்பாட்டில்கள் வைக்கப்படிருந்த இடத்திற்கு நேராக பறந்தது. அதை பிடிக்க வலைகளை பயன்படுத்தினர். அந்த மயில் இறக்கைகளை அடித்து பறந்தனால், பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்துவிட்டது. அதை பிடிக்க அதிகாரிகள் சிறிது நேரம் போராடிய பின், அதை வெளியே கொண்டு சென்றனர்.
சுமார் 9௦ நிமிடங்கள் தான் அந்த பெண் மயில் கடையிலிருந்தது. ஆனால், 5௦௦ டாலர் மதிப்புள்ள ஷாம்பெயின் உள்ளிட்ட சிறந்த மதுப்பாட்டில்கள் உடைந்துவிட்டது. என்று கடையின் உரிமையாளர் கூறினார்.