October 6, 2017 தண்டோரா குழு
மதுரையில் அக்டோபர் 8 ஆம் தேதி RSS தரப்பில் நடைபெறவிருந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மதுரையில் நாளை மறுநாள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கோரிபேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த கிருஷ்ணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்,” விஜயதசமி மற்றும் RSSந் அமைப்பு தினத்தை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி, மாலை 5 மணி முதல் 6 மணி வரை மதுரை ஆர்.ஆர்.மண்டபத்திலிருந்து, அண்ணாநகர் சுகுனா ஸ்டோர்ஸ் வரை பேண்ட் இசை வாத்தியத்துடன், ஊர்வலமாக செல்லவும், பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தோம். அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் இதற்கான அனுமதியை மறுத்து நேற்று உத்தரவிட்டுள்ளார். எனவே அமைதியான முறையில் நடைபெறும் கூட்டத்தித்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.நீதிபதி சுந்தர் முன்பாக இந்த வழக்கை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.
அப்போது காவல்துறை தரப்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருக்கும் பகுதியில் அதிக மருத்துவமனைகள் உள்ளன. பேண்ட் வாத்தியத்துடன் செல்வதால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாவர். மேலும் இதற்கு முன்பாக ஆர் எஸ் எஸ் தரப்பில் பேரணி நடத்த நீதிமன்றத்தில் அனுமது பெறும் நிலையில் தற்போது எவ்வித அனுமதியும் பெறவில்லை. ஆகவே அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர், மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையருடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி முடிவெடுக்கவும், அதனை அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.