March 3, 2017
தண்டோரா குழு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை வெள்ளிக்கிழமை (3 மார்ச்) சந்தித்துப் பேசினார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர் ஜாவடேகரை முதல்வர் சந்தித்துப் பேசினார். அப்போது, முதலமைச்சருடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு 3௦ நிமிடம் நடைபெற்றது. சந்திப்பின்போது, மருத்துப் படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு’ தமிழக மாணவர்களுக்கு நடத்தப்படக் கூடாது. தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கையை முன் வைத்தார்.
தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.