• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனமே சிறந்த மருந்து.

March 3, 2016 வெங்கி சதீஷ்

ஒருமுறை ஒரு கூட்டத்தில் பேச சுகிசிவம் அவர்களை அழைத்திருந்தனர். அவர் வந்து பேசும்போது ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைத்தபின் மனமே மருந்து என பேசத்துவங்கினார். அப்போது ஒரு உண்மை சம்பவத்தை கூறினார்.

ஒரு மருத்துவர் ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என பரிசோதனை செய்தபோது, அவருக்கு இரத்தத்தில் யூரியா நைட்ரஜன் அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்தார்.

பின்னர் அவர் நோயாளியிடம் அதைக் கூறுவதற்கு தயங்கித் தயங்கி கூறியபோது, நோயாளி என்ன டாக்டர் எனக்கு ரத்தத்தில் உப்பு அதிகம் இருக்கிறது அவ்வளவு தானே இதற்கு எதற்குத் தயக்கம் பட்டென்று கூறவேண்டியது தானே இது என்ன புதுசா என கேட்டுள்ளார்.

அதில் அதிர்ந்த அவர் இவர் உண்மையாகவே கூறுகிறாரா அல்லது எதேச்சையாகக் கூறுகிறாரா எனத் தெரிந்துகொள்ள எவ்வளவு நாட்களாக இந்தப் பிரச்சனை உள்ளது என கேட்ட உடனே அவர் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

அதை இடைமறித்த அவரது மகள் இந்த வியாதி இவருக்கு 40 ஆண்டுகளாக இருப்பதாகவும், இந்த வியாதி முதன்முதலில் அவர் ராணுவத்தில் இருக்கும்போது மருத்துவர் கண்டறிந்து அவர் இன்னும் ஒரு சில மாதங்களே உயிரோடு இருப்பார் எனவும், அதற்குள் அனைத்தையும் அனுபவித்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகூறி ராணுவத்தை விட்டே வெளியேற்றப் பரிந்துரை செய்துள்ளார்.

இதனால் அவர் விருப்ப ஓய்வு பெற்று வந்தார் என கூறினார் அவரது மகள். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து ராணுவ மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அந்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதனால் மீண்டும் ஒரு மருத்துவரைச் சென்று பார்த்தபோது அவரும் இரண்டு வருடம்தான் வாழமுடியும் என கூறினார் ஆனால் அவர் நான்கு ஆண்டுகள் கழித்து சென்றபோது அந்த மருத்துவர் இறந்துவிட்டார்.

எனவே இனி எந்த மருத்துவரும் இறக்கக்கூடாது என நினைத்து தற்போது பதினைந்து ஆண்டுகள் கழித்து உங்களிடம் வந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். பின்னர் முன்னாள் ராணுவ வீரர் டாக்டர் நான் எவ்வளவு நாளில் இறப்பேன் என அவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் அச்சச்சோ நீங்கள் பல ஆண்டுகள் உயிருடன் இருப்பீர்கள் என கூறியதோடு நான் உங்களை வைத்து சில ஆராய்ச்சிகள் செய்யவேண்டும் எனவே நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் என கூறிவிட்டு எப்படி இவ்வளவு நாள் இருந்தீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு முன்னாள் ராணுவ வீரர் நீங்கள் நான் இறப்பது பற்றி யோசிக்கிறீர்கள் நான் உயிருடன் இருப்பது பற்றி யோசிக்கிறேன் என கூறியுள்ளார். அதைக் கேட்ட மருத்துவர் பின்னர் தனது சுயசரிதையில் இதைக் குறிப்பிட்டுள்ளார் என கூறிய சுகி சிவம், தற்போது இந்த நிகழ்வின் மூலம் நோய் என்பது அவரவர் மனதைப் பொறுத்தே அமையும் என கூறிவிட்டு,

பின்னர் அதற்காகச் சர்க்கரை வியாதி உடையவர் எனக்கு இல்லை என நினைத்துக்கொண்டு இனிப்பைச் சாப்பிட வேண்டும் என கூறவில்லை, உணவுக் கட்டுப்பாட்டுடனும் சிகிச்சையுடனும் இருப்பதுடன் மனதும் நோய்பற்றிய பயம் இல்லாமல் இருந்தால் நோய் அதிகமாகப் பாதிக்காது எனத் தெரிவித்தார். எனவே நோயின் தன்மை மன வலிமையைப் பொறுத்து மாறும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க