• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனித வடிவில் பிறந்த ஆட்டுக்குட்டி.

May 3, 2016 தண்டோரா குழு

மலேசியாவில் வசித்து வரும் விவசாயி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி ஊட்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவர் வளர்க்கும் ஆட்டுக் குட்டி ஒன்று மனித உருவம் கொண்டது போல் காட்சி அளித்துப் பார்ப்பவர் அனைவரையும் வியப்படைய வைத்தது.

இப்ராஹீம் பஷீர் என்னும் விவசாயி தெற்கு மலேசியா நாட்டில் உள்ள பெல்டா என்னும் சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அவர் வளர்க்கும் கால்நடையில் ஒன்றான ஆட்டிற்கு மனித உருவம் போல் காட்சி அளிக்கும் ஆட்டுக் குட்டி ஒன்று பிறந்தது.

தனது ஆட்டிற்குப் பிறந்த அதிசய குட்டியை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக அந்த விவசாயி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதில் சோகம் என்னவென்றால் அந்தக் குட்டி பிறந்த சில மணி நேரத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. பின்னர் அந்த விவசாயி அந்தக் குட்டியை பரிசோதனைக்காகக் கால்நடை துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

கிராம மக்கள் அனைவரும் இப்ராஹீம் பஷீருக்கு உதவும் வகையில் அந்தக் குட்டி இறந்ததற்காகச் சிறிய தொகையைக் கொடுக்க முன்வந்தனர்.

ஆனால் பஷீர் அதற்குப் பதிலாக அந்த ஆட்டுக்குட்டியின் வடிவம் கைக்குழந்தையின் உருவம் கொண்டது போல் கட்சி அளிப்பதால் சிறந்த வல்லுநர்களிடம் ஒப்படைத்து அதன் காரணம் என்ன வென்று தெரிந்து கொள்ள முன்வந்தார்.

பஷீரிடம் பண்ணை தொழிலாளராக வேலை பார்க்கும் ஜமாலுதீன் அப்துல் சமத் என்பவர் மூலமாகத் தனது பண்ணையில் உள்ள ஆட்டிற்குக் குழந்தை வடிவில் ஒரு ஆட்டுக் குட்டி பிறந்துள்ளது தெரியவந்ததாக பத்திரிக்கையாளர்களிடம் பஷீர் தெரிவித்துள்ளார்.

அப்துல் தனக்கு தகவல் தெரிவித்தவுடன் அங்குச் சென்று அந்தக் குட்டியை பார்த்தபோது அதன் முகம், மூக்கு, கால்கள் போன்றவை அனைத்தும் குழந்தைபோலவும், உடல் முழுவதும் பஞ்சு போல மென்மையாக இருந்ததாகவும் கூறினார்.

அந்தக் குட்டி ஆடு இறந்ததற்குக் காரணம் என்னவென்று கேட்கும்பொழுது பஷீர், அந்தக் குட்டியின் தாய் தன் காலால் மிதித்ததன் காரணமாக இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க