June 15, 2017
தண்டோரா குழு
ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை என்று தமிழக அரசு எழுப்பிய சந்தேகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவு தொடர்பாக தமிழக அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.அதில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதிக்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட மனைகளை மறுபதிவு செய்ய தடை ஏதும் இல்லை என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி கட்டுமானம் செய்து கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பத்திரபதிவு தடை அமலில் ( 9/9/2016 முதல் 28/03/2017 வரை ) இருந்த போது நடந்த பதிவான மனைகளுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.