August 7, 2017 தண்டோரா குழு
மன அழுத்தம் நோய் காரணமாக அவதிப்படும் ஒய்வு பெற்ற அமெரிக்க விமானப்படை வீரர்களுக்கு ‘செயற்கை சொர்க்கம்’ விடுதி ஒன்று அமெரிக்கா நியூஜெர்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியில் விமானப்படை வீரர்களுக்கு தங்குமிடம், ஆலோசனை வழங்குதல், விலங்குகள் மூலம் சிகிச்சை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த விடுதியை முன்னால் விமானப்படை வீரர் டான்னி டேவிஸ் கட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப்படை வீரராக டேவிஸ் பணியாற்றியுள்ளார். அதன் பின் கிறிஸ்துவ மத போதகராகவும் இருந்துள்ளார். இவர் இந்த விடுதி கட்ட வேண்டும் என்பதற்காக 200,000 டாலர் விலையில் 277 ஏக்கர் நிலம் வாங்கினார்.
“அழகான சுற்றுச்சூழல், அமைதியான இடம் ஆகியவற்றால் என்னை பாதித்த மன அழுத்தம் குணமாகியது. தற்போது அமைதியான வாழ்க்கை கிடைத்துள்ளது. என்னை போன்று பாதிக்கப்பட்டுள்ள மற்ற விமானப்படை வீரர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்” என்று டேவிஸ் தெரிவித்தார்.