April 1, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியின் சார்பாக மேம்பால தூண்கள், மேம்பாலத்திற்கின் கீழ் பகுதியில் உள்ள சுவர்களில், சங்க கால ஓவியங்கள்,புராண கதைகள் மற்றும் கோவையின் பெருமைகள் போன்றவைகள் ஓவியங்களாக வரையப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை மரக்கடை மேம்பாலத்தில் கீழ் பகுதியில் உள்ள சுவரில் கோவையின் பெருமையான மருதமலை முருகன் கோவிலின் ஓவியம் வரைபட்டு இருந்தது. ஓவியம் மிகவும் அழகாக மக்களை கவரும் வண்ணம் இருந்தது. இதனிடையே இந்த ஓவியத்தின் மீது சில நபர்கள் கருப்பு மையை வீசி விட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்து அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதனிடையே இப்பகுதியில் உள்ள ஓவியத்தை கருப்பு மை பூசி அழித்தவர்கள் யார் என கோவை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.