January 12, 2022 தண்டோரா குழு
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து கோவிலுக்கு செல்லும் சாலை 2 கி.மீ தூரம் உள்ளது. இச்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் குப்பைகளை சேகரிக்கும் பணி நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர், வனச்சரக அலுவலர், சரக பணியாளர்கள் 25 பேர் மற்றும் மருதமலை மலைவாழ் மக்கள் கிராமத்தை சார்ந்த துப்புரவு பணியாளர்கள் 10 பேர் கொண்ட குழுவினரால் சுத்தம் செய்யபட்டது. இதில் பிளாஸ்டிக் குப்பைகள் சுமார் 200 கிலோ அளவில் சேகரிக்கப்பட்டது.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் கோவில் அருகே அமைந்துள்ள கடைகளுக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.