• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மருத்துவத்தையும் வியாபாரமாக்கும் பணம் தின்னிக் கழுகுகள்.

April 25, 2016 thandoraa.com

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். அப்பணம் தின்னிக் கழுகுகள் மருத்துவத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கு இதோ மற்றுமொரு சான்று.

தெலுங்கானாவில் உள்ள கரீம் மாவட்டத்தில் 2 முதல் 10 ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிக் குழந்தைகள் சுமார் 40 முதல் 50 பேர் ஒரே விதமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதைக் கண்ட பெற்றோர் காவல்துறையை அணுகியுள்ளனர்.

சில்லா பரிஷட் 8 ம் வகுப்பு பள்ளி மாணவன் , மனோஜ் . வயிற்று வலியென்று மருத்துவரை அணுகியுள்ளான். உடனே அம் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூற பெற்றோர் அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்து ள்ளனர். அவர் தனது சக மருத்துவருக்குப் பரிந்துரை செய்துள்ளார். இருவரும் உள் கூட்டு.

அறுவை சிகிச்சைக்கு 20,000 முதல் 25,000 ரூபாய் வரை வசூலித்துள்ளனர். மருத்துவர் தாட்டிபாமுலா சுரேஷ் கிட்டத்தட்ட 300 அப்பன்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை இந்த ஒரு வருடத்தில் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எந்த விதமான பரிசோதனையுமின்றி, மயக்க மருந்து கொடுப்பதற்கு ஆளுமின்றி, எந்த விதமான நவீன உபகரணங்களுமின்றி, ஏற்றமுன்னேற்பாடுகளுமின்றி, ஒரு ஷெட் போன்ற இடத்தில் இச்சிகிச்சைகள்
நடைபெற்று வந்துள்ளன.

பணத்திற்கு முன்பு அவர்களுக்கு மனித உயிர் விலை இல்லாமல் போனது. வியாபாரம் பெருகியதில் மருத்துவர் சுரேஷ் இன்னொரு கிளையையும் துவங்கியுள்ளார். இது மட்டுமில்லாது இதோ இன்னுமொரு துயரம்.

மூட்டப்பள்ளி கிராமத்தில் சாத்தம்மா என்பவர் ஜகட்டியால் க்ளினிக்க்கு சிகிச்சைக்காகச் சென்ற பொழுது முதலில் அவரதுகர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது. அதன் பின்பும் குணமாகாததால் மீண்டும் அப்பன்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

புஷ்பா என்பவருக்கு ஏற்கனவே மூன்று முறை குழந்தைப் பேறுக்காக சிசேரியன் செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காகச் சென்ற அவருக்கு முதலில் அப்பன்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை, அடுத்து கற்பப் பை கட்டி நீக்கம், மூன்றாவதாக கர்ப்பப்பை அகற்றம். ஆக 6 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவர் இன்னும் குணமாகவில்லை.

முதுகு வலி , இன்னும் பல வலியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார். தெலுங்கானா நியூஸ் தகவலின்படி விசாரணை அதிகாரி ராஜசேகர் ராஜூ கூறுகையில் இது மிகவும் திடுக்கிடவைக்கும் செயல் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க