December 21, 2017 தண்டோரா குழு
மருத்துவமனையில் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால் தான், சசிகலா வீடியோ எடுத்தார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்
நேற்று வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
ஆர்.கே.நகரில் எனக்காக பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெ.சிகிச்சை குறித்த வீடியோ பிப்ரவரியில் இருந்து எங்களிடம்தான் உள்ளது. ஜெயலலிதா கேட்டுக் கொண்டதாலேயே நவம்பரில் சசிகலாவால் வீடியோ எடுக்கப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் தனது சுய லாபத்திற்காக வெளியிடவில்லை. வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டதால் நான் வருத்தமடைந்தேன். தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று வீடியோவை வெளியிட்டிருக்கலாமே என வெற்றிவேலிடம் கூறினேன். ஜெயலலிதாவின் மறைவு குறித்து பொய் பரப்புரை செய்து சசிகலாவின் பெயரை களங்கப்படுத்தினார்கள். ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்டுதான் வாக்குபெற வேண்டும் என விரும்பவில்லை. சசிகலா மீது கொலைப்பழி தொடர்ந்து சுமத்தப்பட்டதால் வெற்றிவேல் கோபத்தில் இருந்தார். ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிடுவதற்கு முன்பு வெற்றிவேல் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவின் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது சரியா, தவறா என்ற பிரச்னைக்குள் செல்ல விரும்பவில்லை ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ பொதுவெளிக்கு வருவதை நான் விரும்பவில்லை என்னுடைய தூண்டுதலால் வீடியோ வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டு வரும் என முன்னரே கூறினேன்.
இவ்வாறு அவர் பேசினார்.